தெஹ்ரானை அதிர வைத்த இஸ்ரேலிய தாக்குதல்! 16 விமானங்கள் முழுமையாக அழிப்பு
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் (Mehrabad International Airport) மீது இரவு முழுவதும் நடத்திய பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC)யின் குட்ஸ் படை (Quds Force) உடன் தொடர்புடைய 16 விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ அறிக்கையின்படி,
Israeli Air Force struck Mehrabad Airport in Tehran, destroying 16 aircraft linked to the IRGC’s Quds Force.
— Mossad Commentary (@MOSSADil) March 9, 2026
The planes were reportedly used to transport weapons and funds to Iranian proxy groups like Hezbollah, making them a high value target in the war. pic.twitter.com/aYKYOlc9YN
அழிக்கப்பட்ட விமானங்கள்
“இந்த தாக்குதல் மார்ச் 6-7 இரவு நடைபெற்றது. அழிக்கப்பட்ட விமானங்கள் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள், பணம் மற்றும் பிற பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டவை என IDF தெரிவித்துள்ளது.

மெஹ்ராபாத் விமான நிலையம் குட்ஸ் படைக்கு மத்திய லாஜிஸ்டிக்ஸ் மையமாக (central hub) செயல்பட்டு வந்ததாகவும், இதனால் இது உயர் மதிப்பு இலக்காக (high-value target) தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.
தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள பிற இராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலிய விமானங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சில ஈரானிய போர் விமானங்களும் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய விமானப்படையின் அதிக போர் விமானங்கள் இந்த அலை தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் பெரிய தீப்பிழம்புகள், புகை மண்டலம் மற்றும் வெடிப்புகள் எழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
சில காணொளிகளில் எரியும் விமானங்கள் மற்றும் புகை மேகங்கள் தெளிவாகத் தெரிவதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |