காசாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை: முற்றாக நிராகரித்த இஸ்ரேலிய தரப்பு
காசாவில் (Gaza) போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Minister Bezalel) நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், போர்நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா (USA), கத்தார் (Qatar) மற்றும் எகிப்து (Egypt) உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் சமீபத்தில் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இதனை நிராகரித்து இஸ்ரேலிய நிதி அமைச்சர் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ஹமாஸின் (Hamas) அழிவுக்கு முன் போர் நிறுத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சரணடைதல் ஒப்பந்தத்திற்கான நேரம் இது இல்லை.
பிரதமர் நெதன்யாகு
பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆனால் யூதர்களைக் கொன்ற கேவலமான மக்களை விடுவிக்க இன்னும் நேரம் வரவில்லை ” என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரதமர் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) இந்த வலையில் விழ வேண்டாமென வலியுறுத்தியள்ளதாகவும் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார்.
மறைமுகப் பேச்சுவார்த்தை
பல மாதங்களாக, எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகியவை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், காசாவில் இருந்து படைகளைத் திரும்பவும், அகதியான பலஸ்தீனியர்களை வடக்கு காசாவிற்கு திரும்ப அனுமதிக்கவும், ஹமாஸ் விடுத்த கோரிக்கைகளை இஸ்ரேல் நிறைவேற்ற மறுத்ததால் இதுவரை எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.
தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகையால், இது இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |