காசாவின் அரசியல் ஆய்வாளரை குடும்பத்துடன் கொன்றது இஸ்ரேல் படை
இஸ்ரேல் படையினர் நடத்திய எறிகணைவீச்சில் காசாவின் அரசியல் ஆய்வாளர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்து தெரிவித்துள்ளார்.
காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய எறிகணைவீச்சில் அய்மன் ரஃபாதி, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர்.
காசாவின் குரல்களை இஸ்ரேல்
காசாவின் குரல்களை இஸ்ரேல் அமைதிப்படுத்துவதாக அப்து குற்றம் சாட்டினார்.
Breaking: Israel has just killed political analyst Dr. Ayman al-Rafati. Al-Rafati had been hosted by Al Jazeera last night as a guest from Gaza. It is evident that Israel seeks to silence any voice from Gaza. pic.twitter.com/b4bHEwVLMZ
— Ramy Abdu| رامي عبده (@RamAbdu) February 14, 2024
இது காசாவின் கல்வி முறையை இஸ்ரேல் அழித்ததைக் குறிக்க பிரபலமாகிவிட்டது.
உடலை தேடும் உறவுகள்
இஸ்ரேலிய இராணுவம் இதற்கு முன்னர் கவிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என 100 பத்திரிகையாளர்களை கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Israel assassinated Dr. Ayman Rafati, his wife and children. He often appeared on Al Jazeera to provide analysis as bombs fell around him. Today, Al Jazeera showed his brothers and neighbors searching for his body under the rubble with their bare hands.
— Hanna Alshaikh - هناء الشيخ (@yalawiya) February 14, 2024
This is scholasticide. https://t.co/oODaFku7D7
கட்டடத்தின் இடிபாடுகளுக்கிடையில் அவரது உடலை சகோதரர்களும் அயலவர்களும் தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |