ஹமாஸ் கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் சடலமாக மீட்பு
Israel
Israel-Hamas War
Gaza
By Jaso
ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக்கைதிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அல் ஷிஃபா மருத்துவமனையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து" அவரது சடலம் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய படை கூறியது.
குடும்பத்தினருக்கு தகவல்
"அடையாளம் கண்டறியும் செயல்முறை" மேற்கொள்ளப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதான "புற்றுநோயாளி
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான எல்லைக்கு அருகில் உள்ள பீரியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெயிஸ் கடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதான "புற்றுநோயாளி, அவரது கணவர் ஷ்முவேல் ஒக்டோபர் 07 அன்று ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.