ஹமாஸ் மீதான பயம்! நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய இஸ்ரேல் தொகுப்பாளினி
இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி ஒருவர் இடுப்பில் துப்பாக்கியுடன் நேரலையுடன் தோன்றியமை தற்போது வைரலாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன் அங்கிருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து காசா பகுதிக்குள் கொண்டு வந்தனர்.
ஹமாஸ் மீதான அச்சம்
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம், காசா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சண்டை நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் நுழைந்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேரலையில் தொகுப்பாளினி
இதனால் இஸ்ரேலில் உள்ள பெண்கள் பலர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலை செய்யும் இடங்களுக்கும் ஆயுதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
அவர்களில் இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி லிட்டல் ஷேமேஷும் ஒருவர். அவர், கடந்த செவ்வாய்க்கிழமை நேரலை ஒளிபரப்பில் தோன்றியபோது, இடுப்பில் துப்பாக்கியை மாட்டியிருந்தார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |