காசா போரில் பலியாகிய இஸ்ரேலிய வீரர்கள்: இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவல்!
இஸ்ரேல் ஹமாஸ் போரில், 10 சதவீதத்திற்கும் மேலான இஸ்ரேல் வீரர்கள் தவறுதலான விபத்துக்களால் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு மேல், தொடர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் 15,000ற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரைவழி தாக்குதலில் ஈடுப்பட்டு வரும் 10% வீதமான இஸ்ரேல் வீரர்கள் தவறுதலான விபத்துக்கள் மற்றும் நட்பு ரீதியான தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக மேற்கோள்காட்டப்பட்டது.
இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேல் ஹமாஸ் போரில்105 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு அதில் 20 பேர் எதிர்பாராத விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலின் போது 13 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆயுத கோளாறு காரணமாக 2 வீரர்களும், வாகன விபத்துக்களில் இன்னும் பலரும் உயிரிழந்து இருப்பதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர் தொடங்கியதில் இருந்து 17,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |