கனடாவில் சவர்க்காரங்களை பயன்படுத்தி நகர்த்தப்பட்ட 220 தொன் கட்டடம்(படங்கள்)
கனடாவில் 220 தொன் எடையுள்ள ஹோட்டல் 700 சவர்காரங்களின் உதவியுடன் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள விடுதியொன்றையே ஒரு வழக்கத்திற்கு மாறான முறையைப் பயன்படுத்தி நகர்த்தப்பட்டுள்ளது.
எல்ம்வுட் கட்டடமானது, 1826 ஆம் ஆண்டு வீடாக கட்டப்பட்டு, பின்னர் 1896 இல் விக்டோரியன் எல்ம்வுட் விடுதியாக மாற்றப்பட்டது.
சவாலான பணி
இந்தக் கட்டிடம், 2018 ஆம் ஆண்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது.
எனினும் ஒரு தனியாார் நிறுவனமான கேலக்ஸி ப்ராப்பர்டீஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை புதிய இடத்திற்கு நகர்த்த திட்டமிட்டு வாங்கியது.
220 தொன் எடையுள்ள கட்டிடத்தை புதிய இடத்துக்கு மாற்றும் சவாலான பணி எஸ்.ரஷ்டன் கன்ஸ்ட்ரக்சனுக்கு வழங்கப்பட்டது.
பாரம்பரிய உருளைகளுக்குப் பதிலாக 700 பார்கள் ஐவரி சவர்க்காரத்ததை பயன்படுத்தி கட்டிடத்தை சட்டத்தின் குறுக்கே சறுக்குவதற்கு குழு தேர்வு செய்ததாக ரஷ்டன் பகிர்ந்து கொண்டார்.
கட்டட நகர்வு
ஐவரி சவர்க்காரம் மென்மையானது என்பதால், கட்டமைப்பை நகர்த்துவது எளிதாக இருக்கும், என்றார்.
சவுத் எண்ட் ஹாலிஃபாக்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எல்ம்வுட் ஹோட்டல், ஏறக்குறைய 200 ஆண்டுகளில் அதன் முதல் பயணத்தை மேற்கொண்டது.
கட்டடம் 30 அடி தூரத்திற்கு மாற்றப்பட்டது.அதனை தொடர்ந்து கட்டிடம் மாற்றப்பட்ட வீடியோவை கட்டுமான நிறுவனம் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது.
புதிய அடித்தளம் தயாரான பிறகு கட்டிடம் மாற்றப்பட்டதோடு எதிர்காலத்தில் இந்த வரலாற்று கட்டிடத்தை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |