ஈரானுக்கு எதிரான USS - CVN-72-வுடன் வளைகுடாவில் இணையும் இஸ்ரேலிய தாக்குதல் குழு
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது விமானம் தாங்கி கப்பலான USS Abraham Lincoln (CVN-72) - மூன்று நாசகாரக் கப்பல்களையும் வளைகுடாவை நோக்கி நகர்த்தி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் இன்று சுட்டிக்காட்டியுள்ளன.
சமீபத்தில் தென் சீனக் கடல் வழியாகச் சென்ற இஸ்ரேலிய விமானந்தாங்கி தாக்குதல் குழு, வளைகுடாவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அமெரிக்க கடற்படை தளங்களுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக தாக்குதல்
சமீபத்திய போராட்டங்களை கையாண்டதற்காக ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக ட.ரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு " பாரிய கடற்படை " நாட்டை நோக்கி வருவதாக சபதம் செய்தார். இருப்பினும் அமெரிக்க அதிகாரிகள் பணி அல்லது காலக்கெடுவை விவரிக்கவில்லை.

இந்நிலையில் சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஓமான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை தாமதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
இதன்படி ஈரானுக்குள் முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் பரந்த பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளதாக வளைகுடா அரசியல் தரப்புக்கள் விவரித்துள்ளன.
போராட்டக்காரர்களைக் கொன்றதாக மேற்கத்திய குற்றச்சாட்டுகளை ஈரான் நிராகரித்துள்ள பின்னணியில் இவ்வாறான பதற்றங்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தற்போது குறைந்து வரும் போராட்டங்களின் போது 4,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கைதுகள் குறித்து அறிக்கை அளித்துள்ளது.
இருப்பினும் இணைய கட்டுப்பாடுகளால் சுயாதீன சரிபார்ப்பு தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |