காசாவில் இஸ்ரேல் நடத்திய கொலைவெறி தாக்குதல் : 19 பலஸ்தீனர்களுக்கு நேர்ந்த கதி
தெற்கத்திய காசா (Gaza) எல்லையில் இஸ்ரேல் (Israel) நடத்திய கொடூர தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக என்று ஹமாஸ் (Hamas) அமைப்பின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி அமைப்பினர் ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹவுதிக்கள் ஏவிய ஏவுகணையை இடைநிறுத்தம் செய்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்
தெற்கத்திய காசா பகுதிகளில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிறகு 17 உடல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என ஐரோப்பிய மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோல் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றொரு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
கொடூர தாக்குதல்
இதேபோல் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் மற்றும் அவரது மனைவி தாக்குதல்களில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடந்த வாரம் முடிவுக்கு கொண்டு வந்து, திடீரென கொடூர தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 மணி நேரம் முன்
