சத்தம், சந்தடியின்றி ரபாவின் உள்பிரதேசங்களில் நுழைந்தது இஸ்ரேல் படை
காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல்(israel) இராணுவம் ,ஹமாஸ் அமைப்பின் இறுதி கோட்டை என வர்ணிக்கும் ரபா மீதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்குதல்களை தொடங்கியது.
இதில் எகிப்திலிருந்து ரபா செல்லும் முக்கிய வீதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது இஸ்ரேல் படை.
படையெடுப்பை மேற்கொண்டால் பாரிய உயிர்ச்சேதம்
எனினும் ரபாவின் உள்பகுதிக்குள் செல்வதற்கு கண்டனம் வெளியிட்ட அமெரிக்கா(us), அவ்வாறு படையெடுப்பை மேற்கொண்டால் பாரிய உயிர்ச்சேதம் ஏற்படும் என இஸ்ரேலை எச்சரித்தது.
ஆனால் சத்தம், சந்தடியின்றி ரபாவின் உள்பகுதிக்குள் இஸ்ரேல் இராணுவம் ஊடுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் அதிகாரபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே ரபாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளின் வாகனங்களை செவ்வாய்க்கிழமை தங்கள் வீரர்கள் தாக்கியதாக ஹமாஸ் அறிவித்தது. காயமுற்ற ராணுவ வீரர்களை மீட்க அல்-சலாம் பகுதில் மீட்பு ஹெலிகொப்டர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |