இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!
Sri Lankan Peoples
United States of America
Israel
By Dilakshan
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், சில சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இதேவேளை, இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை.
எனினும், இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்