இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியாகிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
உக்கிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் போரினால் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில், இதில் பலியாகிய சிறுவர்களின் எண்ணிக்கை 724 ஐ எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9 நாட்களாக தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 2,215 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,8714 காயமடைந்துள்ளதாகவும் காஸா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்பாடுகள் ரத்து
மேலும், காஸா பகுதியில் 2 மில்லியன் மக்களுக்கும் மேல் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றாடம் அவதியுற்று வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்பு ஒன்று இஸ்ரேல் அரசாங்கம் தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதாக உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு குடியுரிமையை வைத்திருக்கும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லைக் கடந்து செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இந்நிலையில் இஸ்ரேல் வீரர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களிடம் " அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள் " என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.