இந்தியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் மீட்பு பணிகளில் தீவிரம்
இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகளை மீட்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீற்குமிடையிலான மோதலானது 8 நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில் இதுவரையில் 4 ஆயிரத்திற்கு, அதிகமானோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த மோதலானது தற்போது உக்கிரமடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாடும் தமது நாட்டு மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்திய மீட்பு பணி
இதில் முதக்கட்டமாக இந்தியா 447 இந்திய பிரஜைகளை மீட்டுள்ளது.
இந்நிலையில் 1600 அவுஸ்திரேலிய பிரஜைகள், தாயகம் திரும்ப உதவும்படி அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே குறித்த பிரஜைகளை அழைத்து வருவதற்காக இரு விமானங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏனைய நாடுகளும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
