நாளொன்றுக்கு 100 பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலியப் படைகள்
Israel-Hamas War
Gaza
By Dharu
இஸ்ரேலியப் படைகள் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 100 பாலஸ்தீனியர்களைக் கொல்கின்றன என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் (UNRWA) தெரிவித்துள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலானோர் பட்டினி அல்லது மருத்துவ வசதி இல்லாததால் இறக்கின்றனர் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.
குறித்த விடயத்தை UNRWA ஆணையர் ஜெனரல் பிலிப் லாசரினி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள்
2023 அக்டோபர் முதல், காசாவில் 66,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பிலிப் லாசரினி சுட்டிக்காட்டியுள்ளார்.

20ம் ஆண்டு நினைவஞ்சலி