இஸ்ரோவின் மற்றுமொரு புது முயற்சி : விண்ணில் ஏவப்படவுள்ள இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் (படங்கள்)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தனது நாட்டின் முதல் எக்ஸ்-ரே போலரிமெட்ரி செயற்கைக்கோளை (XPoSat) ஏவுவதற்கு ஆயத்தமாகியுள்ளது.
இதன்படி, குறித்த செயற்கைக்கோள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதலாம் திகதி காலை 9:10 மணிக்கு போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV) மூலம், விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்
இந்த செயற்கைக்கோள் கருந்துளை எக்ஸ்ரே பைனரிஸ், வெப்பமற்ற சூப்பர்நோவா எச்சங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் மற்றும் பல்சர்ஸ் உள்ளிட்ட புறக்கோடி நிலைகளில் அறியப்பட்ட 50 பிரகாசமான வானியல் மூலங்களை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அர்ப்பணிக்கப்பட்ட போலரிமெட்ரி மிஷன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Here are some visuals of the Integration of #PSLVC58 with #Xposat!?
— ISRO InSight (@ISROSight) December 28, 2023
The launch of India's first dedicated polarimetry mission to study polarisation of cosmic X-rays is scheduled for
? January 01, 2024
? At 09:10 hrs IST
from SDSC SHAR#ISRO pic.twitter.com/pyRhVQFJM8
அத்துடன், இந்த செயற்கைக்கோள் 500 முதல் 700 கிலோ மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் எனவும் இதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் அளவீடுகளுடன் கூடிய போலரிமெட்ரிக் அவதானிப்புகள் வானியல் உமிழ்வு செயல்முறைகளின் பல்வேறு கோட்பாட்டு மாதிரிகளின் சிதைவை உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |