மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : கண்டனம் வெளியிட்டுள்ள அரச தலைவர்கள்(காணொளி)
உக்ரைன் மீது ரஷ்யா இன்று (29) நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வான்வழித் தாக்குதல்
உக்ரைன் மீது 110க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் 36 ஆளிள்ளா விமானங்கள் மூலம் ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
தலைவர் பிரபாகரனை விஜயகாந்த் முழுமையாக ஆதரித்தார் : தமிழர்கள் மீதான இன அழிப்பை கண்டித்ததாக சுட்டிக்காட்டு!
இந்த தாக்குதலில் கீவ்வில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிகப்பெரிய தாக்குதல்
கடந்த நவம்பர் மாதம் 96 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
சமீப காலமாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக இந்த தாக்குதல் அமைந்ததுள்ளது.
வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து நான்கு பிராந்தியங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடரும் போராட்டம்
இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொஷெலெமீர் ஜெலென்ஸ்கி தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
A maternity ward, educational facilities, a shopping mall, multi-story residential buildings and private homes, a commercial storage, and a parking lot. Kyiv, Lviv, Odesa, Dnipro, Kharkiv, Zaporizhzhia, and other cities.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) December 29, 2023
Today, Russia used nearly every type of weapon in its… pic.twitter.com/q5q8Q98Njr
அத்துடன், உக்ரைனில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காக தொடர்ந்தும் போராடுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ரிஷி சுனக்
இதையடுத்து, புடினை வெற்றி பெற விடமாட்டோம் எனவும் உக்ரைனுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அந்த நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
These widespread attacks on Ukraine's cities show Putin will stop at nothing to achieve his aim of eradicating freedom and democracy.
— Rishi Sunak (@RishiSunak) December 29, 2023
We will not let him win.
We must continue to stand with Ukraine – for as long as it takes. https://t.co/cf6aDNwPjD
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |