மக்களுக்கு ஏற்பட்ட மோசமான அவமானம் -கோட்டாபய அரசு மீது எதிரணி எம்.பி சாட்டையடி
சிறிலங்கா தற்போது உண்மையாகவே வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மக்களிடம் மருந்துப் பொருட்களை கொண்டு சேர்க்காத அரசு. பனடோல் மாத்திரையை மக்களிடம் கொண்டு சேர்க்காத அரசு. மேலும், குழந்தைகளுக்கு பால் மாவை கொடுக்காத அரசு. நெடுஞ்சாலைகளை மட்டும் எப்படி அமைக்கிறார்கள் என்பது மட்டும் எங்களுக்கு தெரியாது.அப்படி மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி இது.
எனக்கு தெரியாது. இந்த நாட்டைப் பற்றி, இந்த நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று? இது மக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான அவமானம். பால் மா, மருந்து, எண்ணெய், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது மிகப்பெரிய அவமானம்.
நாடு முன்னோக்கி செல்ல எந்த வழியும் இல்லை. நாடு இப்போது உண்மையிலேயே வங்குரோத்து அடைந்து விட்டது என அவர் தெரிவித்தார்.
