ஒரே கட்சியாக இயங்கப்போகும் தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Jaffna Local government Election ITAK
By Theepan Oct 28, 2026 04:38 AM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி வேலைகள் போன்ற விடயங்களிலே ஒரே கட்சியைப் போல இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பிலே உள்ளூராட்சி சபைகளிலே எங்களுடைய இரண்டு கட்சிகளினுடைய உறுப்பினர்கள் இணங்கி சேர்ந்து செயற்படுகிற முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறோம்.

உயிராபத்தான நிலையில் ஷிரந்தி: நலத்துடன் வீடு சென்ற மகிந்த.. நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதம்

உயிராபத்தான நிலையில் ஷிரந்தி: நலத்துடன் வீடு சென்ற மகிந்த.. நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதம்

பயங்கரவாத தடைச் சட்டம்

அதன் பிரதிபலனாக இரண்டு கட்சிகளும் எங்களுடைய உள்ளூராட்சி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கமான அறிவுறுத்தல்கள் கொடுப்பதாக தீர்மானித்திருக்கிறோம்.

ஒரே கட்சியாக இயங்கப்போகும் தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி! | Itak And Dtna Working Together As A Single Party

அதாவது இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இயங்குவதற்கான முக்கியத்துவத்தை அறிவித்து உள்ளூராட்சி சபைகளிலே விசேஷமாக நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி வேலைகள் போன்ற விடயங்களிலே ஒரே கட்சியைப் போல இயங்குவது நல்லது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் இரு தரப்பாலும் அறிவுறுத்தல்கள் கொடுப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.

அதற்கு மேலதிகமாக தற்போது அறிமுகப்படுத்தப்படுகிற அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கிற சட்டம் மற்றது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டம் பற்றி கலந்துரையாடினோம்.

இந்த இரண்டும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கி கொண்டு வரப்படுகிற சட்டங்களாக காணப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் இல்லாத பல விடயங்கள் இந்த இரண்டு சட்டங்களின் மூலமாகவும் கொண்டுவரப்படுகிறது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி 38.77 மில்லியன் பண மோசடி: பெண் உட்பட இருவர் கைது

வீடு கட்டித் தருவதாகக் கூறி 38.77 மில்லியன் பண மோசடி: பெண் உட்பட இருவர் கைது

அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கிற சட்டம்

ஒரு உதாரணத்தைச் சொல்வதாக இருந்தால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் காவல்துறையினர் கொடுக்கப்படுவது நீதிமன்றத்திலே ஏற்புடையதாக இருந்தது அது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது.

ஒரே கட்சியாக இயங்கப்போகும் தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி! | Itak And Dtna Working Together As A Single Party

புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிற அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கிற சட்டத்திலே அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லை அதை நீக்கிவிட்டதாக சொல்லுகிறார்கள். ஆனால் அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்திலே அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலே இருந்த மோசமான அனைத்து விடயங்களும் இந்த இரண்டு சட்டங்களுக்குள்ளேயும் அடங்குகின்றன. அதைவிட கூடுதலான மிகவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் இந்த இரண்டு சட்டங்களிலேயும் கொண்டுவரப்படுகிறது.

இது சம்பந்தமாக நாங்கள் இணைந்து ஒரு போராட்டம் ஒன்றை நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம். அதன் விவரங்களை நாங்கள் பின்னர் எங்களுடைய கட்சி ஆதரவாளர்களோடும் உறுப்பினர்களோடு பேசி அதனை அறிவிப்போம்“ என தெரிவித்தார்.

நீர்கொழும்பு பராமரிப்பு மையத்தில் கொலை செய்யப்பட்ட நாய்: இருவர் கைது

நீர்கொழும்பு பராமரிப்பு மையத்தில் கொலை செய்யப்பட்ட நாய்: இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி