நாளை வவுனியாவில் கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு
இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) மத்தியகுழுக் கூட்டம் தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, வவுனியாவில் (Vavuniya) நாளை (09) முற்பகல் மத்தியக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்தியகுழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் கலந்துரையாடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C.V.K. Sivagnanam), ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
