தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் குறித்து வெளியான தகவல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழு தீர்மானம் தொடர்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா (Nallathamby Srikantha) தெரிவித்துள்ளார்.
யாழில் (jaffna) உள்ள தனியார் விடுதியில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு அம்பாறை மற்றும் திருகோணமலையில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து போட்டியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் பிரதிநிதித்துவம்
அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் குறித்து விசேட கரிசனை ஒன்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு உறுப்பினரே அங்கு தெரிவுசெய்யப்படும் சூழ்நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்தந்த மாவட்டக் கிளைகளோடு பேசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தேர்தலில் வடகிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |