சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இரங்கல்
அரை நூற்றாண்டு காலமாக தமிழ் தேசிய கோட்பாட்டோடு நெருங்கிப் பயணித்த சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு தமிழரசுக்கட்சி வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களது மறைவு குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். அரை நூற்றாண்டு காலமாக தமிழ் தேசிய கோட்பாட்டோடு நெருங்கிப் பயணித்தவர் சிவாஜிலிங்கம்.
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஆழ்ந்த இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாணசபை உறுப்பினராக வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராக கடமையாற்றியவர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பேராளராக வட்டுக்கோட்டை மாநாட்டில் கலந்து கொண்ட சிவாஜிலிங்கம் இறுதி வரை தனது கொள்கையில் உறுதியாக இருந்த ஒருவர்.
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, உறவினர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |