தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

M. A. Sumanthiran Mavai Senathirajah S Shritharan ITAK
By Sathangani Jun 04, 2025 11:45 AM GMT
Report

இலங்கைத் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் என இன்று (04) நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் குறித்த வழக்கின் எதிராளியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் வழக்கானது திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

வழக்கின் இறுதியில் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், ”தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது.

பல்டியடித்த திசைகாட்டி உறுப்பினர்கள்: அநுர தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

பல்டியடித்த திசைகாட்டி உறுப்பினர்கள்: அநுர தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

நீதிமன்றம் உத்தரவு 

அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Itak Executive Council Selection Case Sumanthiran

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார்.

இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு

எதிர்ப்பை வெளியிட்டோம் 

இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Itak Executive Council Selection Case Sumanthiran

எனினும் சில எதிராளிகளின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள்.

குறிப்பாக சிறீதரன் (S.Shritharan), குகதாசன் (K. S. Kugathasan)  மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருந்தார்கள்.

கடற்றொழிலாளர் மீது கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் : வீதிக்கு இறங்கிய மக்கள்

கடற்றொழிலாளர் மீது கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் : வீதிக்கு இறங்கிய மக்கள்

புதிய தலைவர் பதிலியை அணைக்க வேண்டும்

சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Itak Executive Council Selection Case Sumanthiran

ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும். இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி.

எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது" என தெரிவித்தார்.

சுமந்திரனைப் பழி தீர்க்க இணைந்த புதிய கூட்டு - மொட்டின் யாழ் அமைப்பாளர்

சுமந்திரனைப் பழி தீர்க்க இணைந்த புதிய கூட்டு - மொட்டின் யாழ் அமைப்பாளர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025