வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு

Sri Lankan Tamils Tamils Jaffna
By Erimalai Nov 26, 2025 09:02 PM GMT
Report

யாழில் இலங்கை தமிழரசு கட்சியின் மாவீரர் பெற்றோர் உரித்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி பொது மண்டபத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் நேற்று (26) காலை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் முதல் நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் மங்கல வாத்தியம் முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு பொதுச் சுடரினை உடுத்துறையை சேர்ந்த மாவீரரின் தந்தை பொன் சிவலிங்கம் எற்றிவைத்ததை தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை கட்டைக்காடு முள்ளியனைச் சேர்ந்த மாவீரர் கயல் மற்றும் கடல் ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார்.

அமெரிக்காவில் வெடித்து சிதறிய எரிமலை...!

அமெரிக்காவில் வெடித்து சிதறிய எரிமலை...!

மாவீரர்கள் 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாவீர்களின் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு | Itak Hosts Maaveerar Parents Tribute In Jaffna

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.

இதில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், ஜநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்: அமைச்சர் பகிரங்கம்

ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்: அமைச்சர் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016