மண்ணுலகிற்கு விடை கொடுத்ததார் மாவை : தீயில் சங்கமமாகியது பூதவுடல்!
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.
அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன.
உடல் தகனம்
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க் கிழமை (28) அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாவை சேனாதிராஜா கடந்த (29.01.2025) உயிரிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிக் கிரியை நிகழ்வுகள் இடம்பெற்று இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |