தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு : களமிறக்கப்பட்டுள்ள புதிய முகங்கள்
தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் இன்று (06) கூடியது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் அர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன் மற்றும் தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட குழு தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,கட்சியின் இளைஞரணி தலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன், முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் மற்றும் வைத்தியர் சிறிநாத் ஆகியோர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இருவர் மட்டக்களப்பு மாவட்டக்கிளையுடன் கலந்துரையாடி இறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தனது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தற்போது நமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரிதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தை தனித்து போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழக கட்சி சின்னத்தில் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியும் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிடும் எனவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் நியமிக்கப்படவில்லை
இதேவேளை, வன்னித் தேர்தல் மாவட்டம், திருகோணமலை, அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் இதுவரை தமிழரசுக் கட்சியூடாக போட்டியிடும் வேட்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.
எனவே, மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை குறித்த நியமனக்குழு கூடி அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |