தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம்

Sri Lanka Politician ITAK Current Political Scenario
By Shalini Balachandran Dec 28, 2024 09:30 AM GMT
Report

கட்சியிலிருந்து தலைவரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது அதை நான் நேரடியாக பதிவு செய்து விட்டு கூட்டத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்துள்ளேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “எப்போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து விட்டு எடுப்பது வழமை.

இன்றும் அதே நிலைமை தான் இடம்பெற்றது, இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம் பெற்றிருந்தது. தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான், வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கின்றார்.

அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை போட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி ஆகவே அவரும் அந்த வழக்குகளை பின் வாங்கினால் நானும் எனது வழக்குகளை பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்திற்கு செல்வதற்கு தயாராக தான் இருக்கிறேன்.

தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது நாங்கள் கேட்டுக் கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறு தான் கூறியிருந்தோம்.

ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை வெளியிடுகிறார்கள் அது அவர்கள் வெளியிட்டது செய்தி அல்ல தலைவர் தலைவராகவே இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை : சிறிநேசன் எம்.பி அதிரடி

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை : சிறிநேசன் எம்.பி அதிரடி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் அதிரடி கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் அதிரடி கைது

தமிழரசுக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள் : தலைவர் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட மாவை

தமிழரசுக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள் : தலைவர் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட மாவை

You May Like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024