யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி!
யாழ்ப்பாணத்தில்(Jaffna) உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழரசுக் கட்சி இன்று(19) தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது.
இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இன்று(19) காலை கிழக்கு மாகாணத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள்
இதனைத் தொடர்ந்து, வடக்கில் யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று மாலை தாக்கல் செய்துள்ளது.
மேலும், குறித்த வேட்பு மனுக்கள் கட்சியின் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்தில் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று(19) தாக்கல் செய்துள்ளது.
வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை,வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே இன்று தாக்கல் செய்துள்ளது.
அத்துடன், குறித்த வேட்புமனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்று மாலை கையளித்துள்ளனர்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசுக்கட்சி இம்முறை தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்