உடைக்கப்படுகிறதா தமிழரசுக்கட்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவஞானம்!
இலங்கை தமிழரசுக்கட்சியை உடைத்து புதிய தமிழரசுக்கட்சியொன்றை உருவாக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக வெளியான செய்தியை அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் முற்றாக மறுத்துள்ளார்.
சமீபத்தில், புதிய தமிழரசுக்கட்சியை உருவாக்க தாயகத்திலுள்ள - புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்தோடு, அதற்கு தமிழரசுக் கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதற்கு உள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
பாரம்பரிய கட்சி
இவ்வாறாதொரு பின்னிணியில், புதிதாக உருவெடுத்துள்ள சர்ச்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சி.வீ.கே.சிவஞானத்தின் கருத்துக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தான் பேசியதாகவும் அவர்கள் எவருக்கும் இவ்வாறான ஒரு எண்ணம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளியான செய்தியானது, இலங்கை தமிழ் மக்களிடையே இருக்கும் ஒரே ஒரு பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியை திட்டமிட்டு உடைப்பதற்காக புனையப்பட்ட ஒரு விசமத்தரமான செய்தி என்றும் சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 12 மணி நேரம் முன்