தமிழர் பகுதிகளில் சஜித்தின் வெற்றி: சுமந்திரன் - சாணக்கியனின் மார்தட்டலுக்கு பதிலடி

M. A. Sumanthiran Sajith Premadasa Shanakiyan Rasamanickam Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 24, 2024 01:38 AM GMT
Report

வடக்கு, கிழக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரமேதாசவிற்கு (Sajith Premadasa) வாக்களித்தவர்கள், சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரின் வேண்டுகோளை மதித்து அவ்வாறு வாக்களிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு வாக்குகள் வழங்கப்பட்டது தமது கோரிக்கைகளின் நிமித்தமே என்று சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கூறுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கேள்விக்கு விக்னேஸ்வரன் அளித்த பதில், “ஏன்! மற்றவர்களின் குழந்தைகளுக்கு இவர்கள் தங்கள் முதலெழுத்துக்களைக் கொடுக்கப் பார்க்கின்றார்களா?

நாடளாவிய ரீதியில் நடைமுறையான ஊரடங்கு: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

நாடளாவிய ரீதியில் நடைமுறையான ஊரடங்கு: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்


முஸ்லிம்களின் வாக்குகள் 

சஜித் ஏற்கனவே தமிழ் மக்களிடையே முன்னைய தேர்தலின் போது கணிசமான வாக்குகளைப் பெற்றவர். பல வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றார்.அதனால் பலருடன் அவர் தொடர்பு வைத்திருக்கின்றார்.

தமிழர் பகுதிகளில் சஜித்தின் வெற்றி: சுமந்திரன் - சாணக்கியனின் மார்தட்டலுக்கு பதிலடி | Itak Support Votes To Sajith Jaffna Cv S Answer

அதைவிட யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல தேர்தல் தொகுதிகளில் முதனிலை பெற்றவர் அரியநேத்திரன். அவர் சில தொகுதிகளில் இரண்டாவது நிலை பெற்ற போதும் மிகக் குறைவான வாக்குகளால்த் தான் அவ்வாறு இரண்டாவதாக வந்தார்.

எனவே பெருவாரியான மக்கள் அவருக்கு முன்வந்து வாக்களித்துள்ளார்கள். அத்துடன் முஸ்லிம்கள் பலர் சஜித்துக்கு வாக்களித்திருந்தார்கள். அவர்கள் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரின் வேண்டுகோளை மதித்து அவ்வாறு வாக்களிக்கவில்லை.

முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் ரிஷாட் பதுர்தீனின் செல்வாக்கு இருந்து வருவது எல்லோரும் அறிந்ததே. மஸ்தானின் செல்வாக்கும் இருந்து வருகின்றது.எனவே சஜித்துக்கு முஸ்லிம்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கலாம்.

தமிழ் பொது வேட்பாளர்

அதைவிட முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று அவர்கள் (சிங்களவர்கள்) தற்போது அங்கே வாக்களிக்க உரிமை பெற்றுள்ளார்கள்.

தமிழர் பகுதிகளில் சஜித்தின் வெற்றி: சுமந்திரன் - சாணக்கியனின் மார்தட்டலுக்கு பதிலடி | Itak Support Votes To Sajith Jaffna Cv S Answer

முல்லைத்தீவில் மக்கள் மற்றும் படையினரின் விகித வீதம் 2:1 ஆகும். படையினரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். ஆகவே சஜித்துக்கு கிடைத்த வாக்குகள் ஏற்கனவே அவருக்கு இருந்த வாக்குகளும் மேலும் சிங்கள, முஸ்லிம் வாக்குகளுமாவன.

1000க்கு மேலான பௌத்த விகாரைகளை முல்லைத்தீவிலும் கிழக்கு மாகாணத்திலும் கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் சஜித் அவ்வாறான ஒருவருக்கு சுமந்திரன் கூறியதால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா?

தமிழரசுக் கட்சியில் சுமந்திரன், தனது அணியினரின் கூட்டத்தை நடத்திய போது அரியநேத்திரன், தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கக்கூடாது என்று தடை விதித்தனர்.

அப்படியிருந்தும் அரியநேத்திரன், தேர்தலில் ஈடுபட்டு குடா நாட்டினுள் பல இடங்களில் முதன்மை நிலை பெற்றுள்ளார் என்றால் அவரை அந்த இடத்தில் நிறுத்தியவர்கள் தமிழர்களா வேறு சாதி மக்களா? கிழக்கு மாகாண தமிழ் மகனுக்கு பெருவாரியாக வாக்களித்த வடமாகாணத் தமிழ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

அவசர அவசரமாக நேபாளத்திற்கு பறந்த கோட்டாபய

அவசர அவசரமாக நேபாளத்திற்கு பறந்த கோட்டாபய


செல்வாக்கை இழந்த சுமந்திரன் - சாணக்கியன்

அத்துடன், சுமந்திரன் அவர்கள் சிபார்சு செய்த சஜித்தின் வாக்குகளுக்கு அதிகமாகவே ரணிலின் வாக்குகளின் தொகையும் அரியநேத்திரனின் வாக்குகளின் தொகையும் கூட்டி வர அமைகின்றன.

தமிழர் பகுதிகளில் சஜித்தின் வெற்றி: சுமந்திரன் - சாணக்கியனின் மார்தட்டலுக்கு பதிலடி | Itak Support Votes To Sajith Jaffna Cv S Answer

ஆகவே சஜித்துக்கு எதிரான வாக்குகளே வடமாகாணத்தில் கூடியதாக போடப்பட்டன. உண்மையில் இவர்களின் வேண்டுகோளினால் மட்டுந்தான் சஜித் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் இவ்விருவரையும் முற்றாகப் புறக்கணிக்கும் போது உண்மை வெளிவரும்.

வன்னியிலும் கிழக்கிலும் எமது கட்டமைப்பு மக்கள் சந்திப்பு செய்ய காலதாமதம் ஆகிவிட்டது. எனினும் சுமார் 40 நாட்களில் இவ்வளவு முன்னேறியமை பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்களிடையே இருக்கும் செல்வாக்கையே எடுத்துக் காட்டுகிறது.

அது மட்டுமல்லாமல் நாடு பூராகவும் பல தேர்தல் தொகுதிகளில் அரியநேத்திரனுக்கு சொற்பமாயினும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

காகம் ஒரு மரக்கொப்பில உட்கார்ந்திருக்க மாம்பழம் ஒன்று விழுந்ததாம். தான் உட்கார்ந்ததில்த் தான் மாம்பழம் விழுந்தது என்று கொண்டாடியதாம் காகம். இவர்களின் மார்தட்டல் அந்த காகத்தின் மார்தட்டல் தான்.

சுமந்திரனும் சாணக்கியனும் வடகிழக்கு தமிழ் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதித்து இந்தக் கேள்வியை நீங்கள் வைத்துள்ளமை மனவருத்தத்தைத் தருகின்றது. ”  

தமிழ் மக்களால் பொருட்டாகவே கருதப்படாத அரியநேத்திரன்: விமர்சித்துள்ள சுமந்திரன்

தமிழ் மக்களால் பொருட்டாகவே கருதப்படாத அரியநேத்திரன்: விமர்சித்துள்ள சுமந்திரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020