ஹவுதியின் தாக்குதலை முறியடித்த இத்தாலிய போர்க்கப்பல்
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இரண்டு ஆளில்லா விமானங்களை இத்தாலியின் போர்க்கப்பல் சுட்டு வீழ்தியுள்ளது.
இந்த தகவலை இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி நேற்று(12) உறுதிபடுத்தியுள்ளார்.
பாதுகாப்பு நோக்கம்
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து செங்கடலில் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இத்தாலிய நாசகார போர்க்கப்பலான Caio Duilio அனுப்பி வைக்கப்பட்டது.
அதேவேளை, கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஐரோப்பிய பணி Aspides இன் ஒரு பகுதியாக இந்த கப்பல் ஹவுதியின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
எச்சரிகை
அத்தோடு, செங்கடலில் சூயஸ் கால்வாய் மற்றும் மத்திய தரைக்கடல் நோக்கி பயணிக்கும் மேற்கத்திய கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் இத்தாலிய பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்று தஜானி பல எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஹவுதியின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது தற்காப்பு நடவடிக்கை என இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |