500 நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள மூத்த நடிகர்
Hospitals in Sri Lanka
Sri Lankan Actor
By Sumithiran
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த நடிகர் ஜாக்சன் அந்தோணி ஐநூறு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் ருக்சான் பெல்லான தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐநூறு நாட்கள் ஒரு நோயாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தீவிர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டும்
இதன்படி, இந்த நோயாளி தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டும் என இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.
