வைத்தியர்கள், தாதியர்களின் அசண்டையீனமே மகளின் கை அகற்றப்பட காரணம்: பணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தந்தை விரிவான கடிதம்
Jaffna Teaching Hospital
By Jaso
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த தனது மகளின் கை மணிக்கட்டுக்கு கீழே அகற்றப்பட்டது வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அலட்சியம் காரணமாகவே என அந்த சிறுமியின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் தந்தை யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்திக்கு விரிவான கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மனம் வருந்துவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தந்தை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,





