தவறான முடிவெடுத்து 24 வயது இளைஞன் உயிரிழப்பு - யாழ்.மானிப்பாயில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
யாழ்.மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூக்கத்திற்கு சென்ற நிலையில் அவர் காலையில் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறையின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த வேளை இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்