யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - யாழ் இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழப்பு (படங்கள்)
Accident
By pavan
யாழ்ப்பாணம் -சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ் இந்துக்கல்லூரி மாணவன்

இந்த விபத்து சம்பவத்தில் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி