விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!
இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ராஜபச்சகளின் தரப்புக்கு இருந்த தொடர்புகள் குறித்த புதிய விசாரணைகளுக்காக சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபயசேகரா தனது குழுவுடன் பிரான்சில் நிற்பதான ஒரு ஊடக செய்தி நேற்று (01.05.2026) மேதின சிறப்பு செய்தியாக அநுர வாயில் இருந்து வந்தது.
ஈஸ்டர் தாக்குதல்கள் நடக்க முன்னர் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் இடையே இரகசிய சந்திப்புகள் நடந்தன என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு ஹன்சீர் அசாத் மௌலானா என்ற விசில் புளோவர் தகவல்களை வெளியிட்டார்.
அவரது பரபரப்பு தகவல்கள் குறித்து அவரிடமே நேரடியான வாக்குமூலத்தை எடுக்க இந்த குழு தற்போது பிரான்சில் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விசாரணைகளுக்காக சி.ஐ.டியின் உயர் அதிகாரி ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நேற்று (01.05.2026) தனது மேதின கூட்டத்தில் அநுரவும் குறிப்பிட்ட நிலையில் இந்த விடயம் உட்பட்ட விடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |