யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு - இன்று முதல் புதிய நடைமுறை

By pavan May 31, 2023 03:22 AM GMT
Report

தற்போது அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று(31) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

யாழில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“யாழ்ப்பாண குடா நாட்டில் மே மாதம் மாத்திரம் 10ற்கும் மேற்பட்ட வீதி விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ள்ளதுடன் வீதி விபத்துகளில் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விசேட நடவடிக்கை ஒன்று இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று முதல் யாழ்ப்பாண குடா நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை உரிய சட்ட நடவடிக்கைக்குட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

விசேட வேலைத்திட்டம்

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு - இன்று முதல் புதிய நடைமுறை | Jaffna Accident Police New Announcement Today

அத்துடன் வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடியவாறு மஞ்சள் கடவைக்கு அண்மையில் வாகனங்களை நிறுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துதல், வேகமாக வாகனங்களை செலுத்துதல், தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துதல் போன்ற பல்வேறுபட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 80 வீதமானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியே தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக தலைக்கவசம் அணியாது செல்கின்றார்கள். வேகமாக பயணிக்கின்றார்கள்.

நகரப்புறங்களிலும் வேகமாக வாகனங்களை செலுத்துகின்றார்கள். வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவாறு வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

எனவே இன்று முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடமையாற்றும் போக்குவரத்து காவல்துறையினரை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிபுரிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு - இன்று முதல் புதிய நடைமுறை | Jaffna Accident Police New Announcement Today

குறிப்பாக யாழ்.நகர பகுதியில் காங்கேசன்துறை வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி பகுதியில் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் அந்த பகுதிகள் விசேட காவல்துறை அணியினரால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விசேட வேலை திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து செயற்படுவதன் மூலம் வீதி விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ள முடியும்.”என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019