இராணுவம் வசம் இருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிலத்தினை வழங்கி வைப்பதற்கான நிகழ்வானது இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காணி வழங்கல்
மேலும் இந்த காணி வழங்கி வைக்கும் நிகழ்வானது ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அதிபர் அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரட்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரட்ன, அதிபர் செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிபர் செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 18 மணி நேரம் முன்
