யாழ் - பருத்தித்துறையில் சிறப்பு முற்றுகை - மூவர் சிக்கினர்
arrest
police
jaffna
By Vanan
யாழ். பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.
இதன்போது பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 20, 31 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோ கிராம், 2 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் என 8 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டுள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்