சாவகச்சேரியில் சட்ட விரோத மது விற்பனை - எழுவர் கைது
arrest
jaffna
drugs
chavakachcheri
By Vanan
பயணத்தடை அமுலில் உள்ள வேளையில் சட்டவிரோதமாக மதுபானத்தை வைத்திருந்த மற்றும் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் சாவகச்சேரியில் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரியில் மதுவரி திணைக்கள குழுவினர் கொடிகாமம் - சாவகச்சேரியில் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 750 மி.லீ மதுபான போத்தல்கள் - 30, 180 மி.லீ மதுபான போத்தல்கள் - 25, 500 மி.லீ பியர் ரின்கள் - 100 என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஏழு சந்தேக நபர்களையும் மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி மது வரி திணைக்களத்தினரால் சட்ட நவடிக்கை உட்படுபடுத்தப்படவுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்