யாழில் காணாமல் போன இளைஞன்! காவல்துறையினரின் உதவியை நாடிய உறவினர்கள்
Sri Lanka Police
Jaffna
Tamil
By pavan
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற மேலாடை மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்
குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் காவல் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி