யாழ். மாவட்டத்தின் கொவிட் பலி 160ஆக உயர்வு
corona
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைய அவரது சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு தொற்றுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி