பாரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் யாழ் மாநகர சபை: அம்பலமாகும் உண்மைகள்
பழுதடைந்த மின்குமிழை கூட மாற்ற முடியாத நிலையில் யாழ் (Jaffna) மாநகர சபையின் நிதி செலவு காணப்படுவதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் தர்ஷானந்த் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் யாழ் மாநகர சபையில் மூன்றாவது முதல்வரிடத்தில் தற்போது பணியாற்றுகின்றேன்.
இதில் மூன்றாவது முதல்வராக அவரிடத்தில் பணிபுரிவது எனக்கு புதிய விடயமாக காணப்படவில்லை.
இருப்பினும் தற்போதைய சபையை முதலாவது சபையுடன் ஒப்பிடும் போது அங்கு நிதியுடன் தொடர்புடைய தாராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் மக்களுக்கு என ஏராளமான திட்டங்களை எங்களால் நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போதை சபையில், ஆணையாளரால் மக்களுக்கு நிதி ஒதுக்கப்படாத நிலையில் பழுதடைந்த மின்குமிழை கூட மாற்ற முடியாத சூழலில் நாங்கள் 45 உறுப்பினர்கள் இங்கு சபையில் உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ் மாநகர சபையின் நிதிச் செலவுகள், தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள், சபையில் காணப்படும் உள்ளக சிக்கல்கள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

