ஊழலுக்கு ஆதரவு வழங்கும் அரசாங்கம் : கொந்தளிக்கும் அர்ச்சுனா எம்.பி
ஊழலைப் பிடிக்கின்றோம் என்று சொல்லும் அரசாங்கமே ஊழலுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தலைமையில் இன்று (17.07.2025) இடம்பெற்றது.
கடும் வாக்குவாதம்
இதன்போது, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் “நீங்கள் நாட்டை முன்னேற்றம் செய்வதற்கு இந்த இடத்திற்கு வர வில்லை உங்களை முன்னேற்றம் செய்து கொள்ளவே இங்கு வந்தீர்கள் என சாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

