யாழில் கட்டடத் தொகுதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்!
police
jaffna
death
investigation
achchuveli
By Kalaimathy
அச்சுவேலி நகரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் வயது- 46 எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.