யாழில் இடம்பெற்ற விபத்து: தொடருந்தை மறித்து ஆர்பாட்டத்தில் குதித்த மக்கள்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற தொடருந்து விபத்தைக் கண்டித்து தொடருந்தை மறித்து ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(15) இடம்பெற்றுள்ளது.
தொடருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடருந்துக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதாதைகள்
இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் தொடருந்து வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்தோடு, ஆர்ப்பாட்டத்தின் போது, இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயகரைக்காவு கொள்ளாதே!, தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் தாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
காவல்துறையினருடன் வாக்குவாதம்
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் சுண்ணாகம் காவல்துறையினர்மற்றும் பொதுமக்கள், கிராம மட்டத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, 6:45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷம் அனுப்பி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |