யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ். மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் (03) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
பாரபட்சமற்ற விசாரணை
நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாரபட்சமற்ற உரிய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும், எச்சந்தர்ப்பத்துலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டத்தரணிகள் வலியுறுத்தினர்.


சாவகச்சேரி
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. வழக்குகள் தவணையிடப்பட்டன.


ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்