சர்ச்சையை கிளப்பிய யாழ். ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - அரச அதிகாரி காவல்துறையில் முறைப்பாடு
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது நேற்று (2.1.2025) நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. .
யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறையில் உள்ள காவல்துறை தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்
கடந்த டிசம்பர் 13ம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஒரு சிலரால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அவதூறுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் குற்றச்சாட்டுக்கள் ஒரு சிலரது முகநூலில் இணைத்து பகிரப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |