யாழில் மாவீரர்களின் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு...!
யாழில் மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈகைச்சுடர்
இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை சூடி அஞ்சலி செய்யப்பட்டது.

நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் 22-11-25 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் மேற்கு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை முன்பாக இருந்து மங்கள வாத்திய இசையுடன் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
வீரம் தியாகம் அர்ப்பணிப்பு
சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மாணவியின் நடன நிகழ்வு மற்றும் வன்னிமயில் நடனக்கலைஞரின் நடன நிகழ்வு என்பன இடம்பெற்று மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரையினை மூத்த முன்னாள் போராளி அன்பரசன் நிகழ்த்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |