நோபல் பரிசு வென்ற மரியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்...!
நோபல் பரிசு வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வெனிசுலா அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நோபால் பரிசு
இந்தநிலையில், நோபால் பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.
விசாரணைகள்
இது தொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “ மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன.
எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |