தன்னிச்சையாக செயற்படும் வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம்

Tamils Jaffna Sri Lanka Fisherman Sonnalum Kuttram
By Shalini Balachandran Oct 11, 2025 11:23 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் தமக்கு அநீதி இழைத்துள்ளதாக கடற்றொழிலாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் அமைந்திருக்கும் நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்களின் சமாசத்திற்குட்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தலா இரண்டு படகுகள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மீன்பிடி சங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் படகுகளை குறித்த சங்கங்கள் தாமாகவே அங்கத்தவர்களுடன் முடிவெடுத்து பயனாளிகளுக்கு வழங்க முடியும்.

இதனடிப்படையில், வெற்றிலைக்கேணி கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் இரண்டு படகுகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த படகு வழங்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தலைமையில் பத்தாம் திகதி வெற்றிலைக்கேணி பொது மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குலுக்கல் முறையில் தெரிவு இடம் பெற்று இரண்டு பயனாளிகளுக்கு படகு இயந்திரத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது தொடர்பாக கடற்றொழிலாளி ஒருவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

வெற்றிலைக்கேணி மீன்பிடிச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் பலர் வறுமை கோட்டிற்குள் காணப்படுவதால் படகு வாங்க முடியாத வறுமை கோட்டுக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களை தெரிவு செய்து குலுக்கல் முறையில் அவர்களில் யாராவது இரண்டு பயனாளிகளுக்கு குறித்த படகுகளை வழங்குமாறு சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வெற்றிலைக்கேணி மீன்பிடிச் சங்கம் பொதுச் சபையின் தீர்மானத்தின் படி சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கி குலுக்கல் முறையில் தேர்வு செய்து இரண்டு பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.

இந்தநிலையில், வழங்கப்பட்ட படகு கடற்தொழில் செய்யாத ஒருவருக்கும் மற்றும் ஏற்கனவே இலவசமாக சங்கத்தால் படகு வழங்கப்பட்டவருக்குமே குலுக்கல் முறையில் படகு வழங்கப்பட்டதாக குறித்த கடற்றொழிலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தம்மைப் போன்ற படகு வாங்க முடியாத ஏழைகள் தற்போதும் அப்பகுதியில் காணப்படுவதால் தமது கோரிக்கையை ஏற்காமல் வெற்றிலைக்கேணி மீன்பிடி சங்கம் அநீதி இழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிலைக்கேணி மீன்பிடி சங்கத்தில் பொருளாளராக தான் இருக்கின்ற வேளையிலும் இடம்பெறும் கூட்டங்கள் தொடர்பாக தனக்கு அறிவிக்காமல் குறித்த சங்க உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படகு வாங்க முடியாத நிலையிலும் மிகவும் வறுமையில் தனது குடும்பம் உட்பட பல குடும்பங்கள் காணப்படுவதால் படகு வாங்க முடியாத நிலையில் உள்ளோருக்கு இந்த படகை வழங்கமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், சங்கம் தன்னிச்சையாக செயற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்

யாழில் பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்

யாழில் தனியார் விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி பணமோசடி!

யாழில் தனியார் விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி பணமோசடி!

ஐ.நாவும் ஈழத்தமிழர்களும்

ஐ.நாவும் ஈழத்தமிழர்களும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016